‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் இவர் தற்போது ”என்ன சொல்ல போகிறாய்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, டேஜஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.