விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் உடனே அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்..
விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி பயணித்துள்ளார்கள்.. எனவே அவர்களின் நிலை? என்னவென்று இதுவரை தகவல் தெரியவில்லை.. விமான விபத்தில் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
காட்டேரி பகுதியில் மதியம் 12:20 மணிக்கு MI -17 V5 ரக விமானம் விபத்து நடந்ததாகவும், சுமார் ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் எரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார்.. விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..