தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடக்குமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதற்கு பதிலளித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நிச்சயம் நடக்கும். மாணவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். மேலும் ஜனவரியில் முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் இல் இரண்டாம் திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.