Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. 8 பேர் பலி…. வெளியான தகவல்…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்துள்ளதாக தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அந்த விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |