தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகிபாபு தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’. ரஜினி பெரிய இடைவெளிக்கு பின் போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இதில் படத்தில் நடித்த அணைத்து முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்ட போதிலும் வழக்கம்போல் கதாநாயகி நயன்தாரா பங்கேற்க்கவில்லை.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய காமெடி நடிகர் யோகிபாபு, ரஜினி நடித்த பாட்ஷா படத்தை பார்க்க 4 ரூபாய் டிக்கெட்டில் சண்டை போட்டுக்கொண்டு போய் படம் பார்த்த எனக்கு அவருடனேயே சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்காதா? என்றும் ,ரஜினி சார் எனக்கு நிறைய சொல்லி கொடுத்தார் என்றும் , அவர் படத்துக்கு நகைச்சுவை நடிகரே தேவை இல்லை அவரே அற்புதமாக காமெடி பண்ணுவார் என்றும் கூறினார்.இந்நிலையில் யோகிபாபுவிடம் அவரின் கல்யாணம் குறித்து கேட்கப்பட்டபோது, நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், எனக்கு கல்யாணம் நடக்காதது தான் பிரச்சனையா? கூடிய விரைவில் எனக்கு திருமணம் நடந்து விடும் எனக் கூறினார். மேலும், உனக்கு தை மாதம் கல்யாணம் நடக்கும் நான் வருகிறேன் என ரஜினி என்னிடம் சொன்னார் என்றும் யோகிபாபு கூறினார்.