ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை மீட்க வேண்டி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப் பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்ததும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் உடனே அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் 4 பேர் பலியான நிலையில், சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர்.. இதனால் 7 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்..
விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி பயணித்துள்ளார்கள்.. எனவே அவர்களின் நிலை? என்னவென்று இதுவரை தகவல் தெரியவில்லை.. விமான விபத்தில் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் தீ பிடித்து எரிந்து வருவதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது…
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.. விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
அதேபோல குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் நேரில் விவரம் அறிய செல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.. மீட்பு பணிகள் மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய 5 மணியளவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிறார்…
இதனிடையே கோவையில் இருந்து 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு விரைந்துள்ளது. அவசர நிலை கருதி அரசு மருத்துவமனை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை மீட்க வேண்டி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
விபத்து நடந்தது எப்போது?
பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை 11:47 மணிக்கு சூலூரில் இருந்து புறப்பட்டுள்ளது.. பகல் 12:20 மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.. தரையிறங்க 10 கிலோமீட்டர் இருந்தபோது விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், திடீரென விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்ததும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்…
Horrible videos of the #BipinRawat helicopter crash circulating (not putting those, best not to see them). Nobody should have to go through this. Very, very sorry to see myself. Thoughts and prayers. 🙏 pic.twitter.com/OdY8d7QdLY
— Tarun Shukla (@shukla_tarun) December 8, 2021