Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாலத்தில் சென்ற பள்ளி வேன்…. வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு…. 25 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு….!!

தரைப்பாலம் வழியாக சென்ற பள்ளி வேன் 25 மாணவர்களுடன் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வழியாக பரளை ஆற்றிற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்  செய்யாமங்கலம்-கொடுமலூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் கடந்த 10 நாட்களாக மூழ்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தரைப்பாலத்தில் சற்று குறைவான தண்ணீர் காணப்பட்டதால் தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பாலத்தை கடக்க முயன்ற உள்ளது.

அப்போது பாலத்திற்கு நடுவே வேன் சென்றுகொண்டிருந்த போது திடீரென வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து வேனுக்கு உள்ளே இருந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் அச்சத்தில் அலறியுள்ளனர். இதனை கேட்டு வந்த அப்பகுதியினர் உடனடியாக குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பின் ஒவ்வொரு குழந்தைகளையும் மீட்டு பாதுகாப்பாக பாலத்தை கடந்து வேனையும் மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தரைப்பாலம் வழியாக வாகனங்களை அனுமதிக்காமல் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |