Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : ஹெலிகாப்டர் விபத்து… பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு… தீவிர சிகிச்சையில் பிபின் ராவத்?

கோவை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்ததும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் உடனே அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

இதில் சம்பவ இடத்திலிருந்து 4 பேரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது.

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை? என்னவென்று இதுவரை தகவல் தெரியவில்லை.. விமான விபத்தில் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட பிபின் ராவத் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. விமானத்தில் தீ பிடித்து எரிந்து வருவதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது…

 

Categories

Tech |