டெல்லியில் பிபின் ராவத்தின் மகளை சந்தித்து பேசுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை? என்னவென்று இதுவரை தகவல் தெரியவில்லை.. விமான விபத்தில் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இல்லத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.. டெல்லியில் உள்ள வீட்டில் பிபின் ராவத்தின் மகளை சந்தித்து பேசி வருகிறார்.