Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. உடனே இத பண்ணுங்க…. இல்லனா பணம் கிடைக்காது….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கிலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நோக்கிலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் ஒன்பது தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில் பத்தாவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பத்தாவது தவணைப் பணம் 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக விவசாயிகள் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் pm-kisan விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதில் தவறுகள் ஏதாவது இருந்தால் பணம் வந்து சேருவதில் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் pm-kisan கணக்கில் விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயம். இல்லையென்றால் பணம் கிடைக்காது. அதைப்போல வங்கி கணக்கு விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். அடுத்ததாக மொபைல் நம்பர் மிகவும் முக்கியம். வங்கி கணக்கு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பராக இருந்தால் பிரச்சனை இல்லை.

அதன்பிறகு விவசாயிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். மேற்கூறிய விவரங்கள் ஏதாவது தவறாக இருந்தால் திருத்தம் செய்ய pm-kisan இணையத்தளத்திற்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும். அது மிகவும் சுலபம். அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த வேலையை முடிக்கலாம். Pm-kisan இணையதளத்தில் உள்ள former corner என்ற வசதியின் கீழ் விவசாயிகள் தங்களது விவரங்களை சரிபார்த்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |