பொதுமக்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் முதலீடு செய்து இரண்டு லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். அதாவது ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்தும் தொகை வெறும் 2 ரூபாய் மட்டுமே. சில வருடங்களுக்கு முன்புதான் குறைந்த அளவு பிரீமியம் செலுத்தி அதிக பயன் பெறும் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இதன் வருடாந்திர பிரீமியம் 12 ரூபாய் மட்டுமே. இந்த பிரீமியம் தொகையை நீங்கள் எங்கு சென்றும் செலுத்த தேவையில்லை. யாருடைய வங்கி கணக்குக்கும் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து ஒவ்வொரு வருடமும் மே மாத இறுதியில் இந்த தொகை தானாகவே பிடித்தம் செய்யப்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் உங்களுடைய வங்கி கணக்கை காலியாக வைத்திருக்க கூடாது. மே மாதத்தில் பிரீமியம் தொகை பிடிக்கப்படும் என்பதை அறிந்து முன்னரே இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் இணைவதற்கு வயது வரம்பு 18 முதல் 70 ஆண்டுகள் வரை. இதில் இணைந்து விட்டால் உங்களுடைய வங்கிக் கணக்கு இதனுடன் இணைக்கப்பட்டு விடும். இந்தத் திட்டத்தில் இணையும் நபர் ஏதாவது விபத்தில் உயிரிழந்து விட்டால் அல்லது உடல் குறைபாடு ஏற்பட்டால் 2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும். உயிரிழப்பின் போது அவரது நாமினிக்கு பணம் வழங்கப்படும். எந்தவொரு வங்கி கிளையிலும் நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் மூலமாகவும் இதில் இணைய முடியும்.