Categories
மாநில செய்திகள்

ALERT: 6 மாவட்ட மக்களே…. இன்று மழை வெளுத்து வாங்க போகுது…. உஷாரா இருங்க…!!!!

வட கிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 12 ஆம் தேதி வரை தென் மாவட்டம் உட்பட சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளையும் நாளை மறுநாளும் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், 12ஆம் தேதி தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |