கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காகம் கிராமத்தில் விவசாயியான நல்லசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் தோட்டத்திற்கு ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அதன்பின் கயிற்றில் வாளியை கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நல்லசிவம் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதையடுத்து தோட்டத்திற்கு சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி பூங்கொடி அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது கிணற்றுக்குள் நல்லசிவம் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நல்லசிவத்தின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நல்லசிவத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.