போலீஸ் வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பங்களா தெருவில் முத்து செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ரோடுரோலர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முத்துச்செல்வம் தூத்துக்குடியிலிருந்து திரு.வி.க. நகர் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்குகளை ஏற்றி செல்லக்கூடிய போலீஸ் நிலைய லாரி பின்னாடி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் போலீஸ் வாகனம் எதிர்பாராத விதமாக செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.