சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார. இந்நிலையில் செல்லையா வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்