தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வக்கம்பட்டி பகுதியில் காய்கறி வியாபாரியான ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கம்பட்டி அருகிலிருக்கும் குடகனாற்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஜோசப் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள கோவில் அருகில் கிடந்த ஜோசபின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் ஜோசபின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.