வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செந்நீர்குப்பம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய ஆட்டோ, மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அறைக்கதவை திறந்து பார்த்தபோது சதீஷ் கண்ணன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் சதீஷ் கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.