பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கோபால் முத்தூரில் பழ வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மகள் கோபாலுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் முத்தூர் அருகிலுள்ள வயலூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னாகல்மேடு என்ற இடத்தில் இரு சக்கர வாகன ஒர்ஷாப் நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தையும், பிறந்து 3 மாதமே ஆன ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் செல்வம் அந்த 13 வயது சிறுமியை மிரட்டி ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் காவல்துறையினர் செல்வத்தை போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் செல்வத்தை திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி செல்வத்தை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.