Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதுவரை 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் அந்தோணி பவுசி அளித்த பேட்டியில், ஒமிக்ரான் வைரஸ் கொரோனா வைரஸ் போன்று ஆபத்தானது அல்ல. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கைக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கை இடையிலான விகிதம் கொரோனா வைரஸை விட குறைவாகவே உள்ளது.

அதனை தொடர்ந்து மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் தொற்று நோயாளிகள் பிரிவு தலைவர் பாஹிம் யூனுஸ் கூறியது, ஓமிக்ரோன் வைரஸ் கொரோனாவை விட ஆபத்தானது இல்லை. ஒமிக்ரான் வைரசால் பாதித்த ஒருவர் கூட இதுவரை இறக்கவில்லை. மேலும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதன்பிறகு அமைச்சரவை செய்தி தொடர்பாளர் கூறியது, ஒமிக்ரான் வைரஸ் கொரோனா வைரஸ் போன்ற வடிவத்தில் உள்ளது. தற்போது இங்கிலாந்தில் 437 பேர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |