மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அடைக்கலம் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக அப்துல் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது மாடசாமி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ அப்துல் ரஹ்மானின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது.
இந்த விபத்தில் அப்துல்ரகுமான், ஆட்டோ ஓட்டுனர் மாடசாமி, அதில் பயணித்த சின்னதாய், ஈஸ்வரன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.