Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இனிமேல் கட்டாயம்…. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் புதிதாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,43,103 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 6,06,787 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டு கொண்டுள்ளனர். இன்னும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மாவட்டத்தில் பொது இடங்களான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட், வியாபார நிறுவனம், திருமண மண்டபம், தங்கும் விடுதி, ஹோட்டல்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்கா, கடைவீதிகள், துணிக்கடைகள் ஆகிய இடங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |