பிக்பாஸ் பிரபலம் முகின்ராவின் வேலன் பட பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இவருக்கு படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
இந்நிலையில் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் வேலன் திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து இப்படத்தின் மற்றொரு பாடலான முகேன் ராவின் ட்ரெண்டிங் சாங் “சத்தியமா நா சொல்லுறேன்டி” என்ற பாடலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை முகேனும் குக் வித் கோமாளி சிவாங்கியும் இணைந்து பாடியுள்ளனர்.