Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் மன அழுத்தம்…. பாதிக்கப்படும் இளைய தலைமுறையினர்…. மருத்துவத்துறை தலைவர் எச்சரிக்கை….!!

இளைய தலைமுறையினரிடையே அதிக அளவு மன அழுத்தம் காணப்படுகிறது என்று மருத்துவத்துறை தலைவர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிப்படைந்தனர். அதிலும் இதனை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையினரிடையே  மனநலம் தொடர்பான பாதிப்புகள் உருவாகும் என்று அமெரிக்க மருத்துவத்துறையின் தலைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Vivek Murthy: Biden taps Indian-American Vivek Murthy as Surgeon General:  Media report - The Economic Times

இது தொடர்பாக அவர் கூறியதாவது “இது போன்ற நோய் தொற்று காலங்களில் கவலை, மனச்சோர்வு போன்றவை இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள், காலநிலை மாற்றம், நிறவெறி மற்றும் சமுதாய பிரச்சினைகள் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக தற்போது இருக்கும் சூழலில் மனநலத்தை காப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பது என்பது மிகவும் அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |