செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக ராயப்பேட்டையில் உள்ள 250 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட நவம்பர் 24 அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோவிலில் அறங்காவலர்கள் இல்லாத நிலையில் கோவில் சொத்துக்களை ஏலம் விடக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைதொடர்ந்த்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். ஏல நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது. ஏலத்தை இறுதி செய்யக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.