பட்டப்பகலில் இரண்டு பெண்களை தாக்கி நகைகளை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்புதூர் கிராமத்தில் கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் சாந்தா என்பவரும் உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கோமதி மற்றும் சாந்தாவை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 14 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா திருடன் திருடன் என்று கத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளை தலைகீழாக பிடித்து சாந்தாவின் முதுகில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நகையை பறிகொடுத்த கோமதி மற்றும் சாந்தினியி டம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவத்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.