Categories
உலக செய்திகள்

‘இது எப்படி அங்க போயிருக்கும்’…. காவல்துறையினரின் துரித செயல்…. வைரலாகும் புகைப்படம்….!!

சோபாவில் மறைந்திருந்த பாம்பை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு வளர்ப்பு பிராணிகளின் கடையில் சேர்த்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் Clearwater என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் ஒருவர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் புதியதாக சோபா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். மேலும் வாங்கி வந்த புதிய சோபாவில் ஓய்வெடுப்பதற்காக படுத்துள்ளார். அப்பொழுது சோபாவில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோபாவை சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து சோபாவில் மறைந்திருந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். குறிப்பாக அந்த பாம்பின் வாலானது சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. மேலும் இது Boa என்ற இனத்தைச் சேர்ந்தது என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பாம்பை உள்ளூரில் உள்ள செல்லப்பிராணிகள் வளர்க்கும் கடையில் சேர்த்துள்ளனர். குறிப்பாக காவல்துறையினர் பாம்பை கையில் வைத்திருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Categories

Tech |