ராட்சத முதலையானது பசியினால் சிறய முதலையை உண்ணும் அரிதான புகைப்படம் வெளிவந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள Sunset Damல் Kruger National Park அமைந்துள்ளது. இந்த பார்க்கில் உள்ள 900 கிலோ எடையுடைய ராட்சத முதலையானது 100 கிலோ எடை கொண்ட சிறிய முதலையை பசியினால் உட்கொண்டுள்ளது. இந்தக் காட்சியை புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான Stephen Kangisser கண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “என் வாழ் நாளில் இது போன்றதொரு காட்சியை நான் கண்டதில்லை. இது மிகவும் ஒரு அரிதான காட்சியாகும்.
மேலும் பூங்காவிற்கு வந்த பார்வையாளருக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். நான் காடுகளில் பல சம்பவங்களை கண்டுள்ளேன். ஆனால் இதற்கு முன்பாக இப்படி ஒரு காட்சியை கண்டதில்லை. இருப்பினும் அந்த சிறிய முதலைக்காக நான் மிகவும் வருந்துகிறேன் இந்த காட்சியை பூங்காவில் இருந்த பெரும்பாலோனோர் கண்டனர். அவர்களும் இதனை மறக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.