நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் 2 கருப்புப்பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை இராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 மணி அளவில் மேகம் சூழ்ந்து மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.. இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் இருந்து வந்த தொழில்நுட்பகுழு வெலிங்டன் ராணுவ மையக்குழு கருப்பு பெட்டியை கண்டெடுத்தது.. காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது..
மீட்கப்பட்ட கறுப்பு பெட்டி பெங்களூரு அல்லது டெல்லி கொண்டு சென்று ஆய்வு செய்ய முடிவு செய்யப்படவுள்ளது. ஹெலிகாப்டரை இயக்கிய விமானியின் பேச்சு பதிவாகி இருக்கும் என்பதால் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும்.. கருப்பு பெட்டி என்பது அதன் நிறத்தை குறிப்பிடுவது அல்ல.. ஏனென்றால் பல்வேறு தகவல்கள் அதில் பதிவாகி இருக்கும் என்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.
Blackbox which was retrieved from the #Mi17V5 crash site. #Bipin_Rawat pic.twitter.com/YC6n8iZWfd
— Mugilan Chandrakumar (@Mugilan__C) December 9, 2021