Categories
உலக செய்திகள்

“மக்களே சூப்பர் தகவல்”…. கொரோனா தொற்று விரைவில்…. ரஷ்ய நிபுணர் கணிப்பு….!!!!

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கமானது விரைவில் முடிவுக்கு வருவதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.

 

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் குறித்து ரஷிய தொற்று நோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் பேட்டி அளித்தபோது “மனிதர்கள் மீது வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் இயற்கையில் புதிய புகலிடத்தை தேடி வருகிறது. இதற்கிடையில் தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் பார்த்தால் அதன் உடம்புக்குள் சென்று தங்கி இருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை நோக்கி இருக்கும்.

இதனையடுத்து மனித சமூகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் மீண்டவர்களின் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். ஆகவே அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |