Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழகத்தில் தீவிரம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இதனால் தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோரில் அறிகுறி இருப்போரை பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். மாநிலத்துக்குள்ளும் மருத்துவ கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |