Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? இன்னும் 5 நாள் தான் இருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய புதிய கால அட்டவணை யை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 20ஆம் தேதி தமிழ் மொழித்தாளும், 21 ஆம் தேதி ஆங்கிலம் மொழி தாளும், 22ஆம் தேதி கணக்கு, 23ஆம் தேதி அறிவியல், 24ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பித்த மாணவர் வரும் 14ம் தேதி முதல் www.dge.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்களுடைய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |