Categories
மாநில செய்திகள்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற்ற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 மணி அளவில் மேகம் சூழ்ந்து மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என பலரும் இவர்களது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் அஞ்சலிக்காக வெலிங்டனிலுள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.. உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்..

Categories

Tech |