Categories
உலக செய்திகள்

“நயாகரா நீர்வீழ்ச்சிக்குள் பாய்ந்த வாகனம்!”…. சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்….!!

அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் மாட்டிய நிலையில் இருந்த வாகனத்திலிருந்து பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்புப் பகுதியில் மூழ்கியிருந்த ஒரு வாகனத்திலிருந்து கடற்படை வீரர்கள் 60 வயது பெண்ணின் சடலத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த வாகனம் எப்படி நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கியது? என்பது  தெரியவில்லை.

எனினும், அருகில் இருந்த சாலையில் குவிந்து கிடந்த பனியில், சரிக்கி வாகனம் நீர்வீழ்ச்சியில் பாய்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மூலம் அந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |