மராட்டியத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் குணமடைந்த முதல் நோயாளியை 7 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை இந்தியாவில் பரவ விடாமல் தடுப்பதற்கு வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 33 வயது பயணி ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த தகவலை கல்யாண்-நோம்பிவிலி மாநகராட்சி கமிஷனர் விஜய் சூர்ய வன்சி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஒமிக்ரான் தொற்றால் பாதித்த அவர் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் குறிப்பிட்டார்.