காவலன் செயலி செயல்பாட்டை பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறையினரால் வெளியிடபட்டுள்ளது .
உலகத்தில் பெண்களுக்கு நேரிடும் பிரச்சனைகளை மையமாக வைத்து ,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக்கருதி தமிழ்நாடு காவல்துறை காவலன் என்ற ஒரு புதிய செயலியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது . காவல்துறை மூலமாக காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதை அந்தந்த மாவட்ட காவல் ஆணையர்கள் கவனத்தோடு கண்காணித்து வர வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனரான திரிபாதி அறிவுறுத்தியுள்ளார் . இந்நிலையில், காவலன் செயலி பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறையினரால் வெளியிட்டப்பட்டுள்ளது .