Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறுதி அஞ்சலிக்கு பிறகு….. 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது!!

முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் Mi 17 v5 ரக ஹெலிகாப்டரில் சென்றனர்.. அப்போது காட்டேரி பகுதியில் நேற்று 12 :08 மணி அளவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.. இந்த பயங்கர விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என பலரும் இவர்களது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்..

அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் அஞ்சலிக்காக வெலிங்டனிலுள்ள ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது.. ராணுவ அதிகாரிகள், தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு அமைச்சர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்..

இதன் தொடர்ச்சியாக முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 13 பேரின் உடல்களுக்கு வழியெங்கும் மக்கள் திரண்டு மரியாதை செலுத்தினர்..சூலூர் விமானப்படை தளத்தில் பேரி கார்டுகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான படைத்தளத்தின் முன் பொதுமக்கள் திரண்டுள்ளனர்..

இதற்கிடையே வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் கேப்டன் வருண் சிங்கை பெங்களூரு அழைத்துச் செல்ல அதிகாரிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள விமானப் படையின் மருத்துவமனையில் வருண் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

Categories

Tech |