‘மகான்’ படத்தில் துருவ் விக்ரம் ஒரு பாடலை பாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”மகான்”. இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில் துருவ் விக்ரம் ஒரு பாடலை பாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சந்தோஷ் நாராயணன் உடன் அவர் இணைந்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
#Dada in @Music_Santhosh 's studio !! Guess What ?? #Mahaan 🔥#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @SonyMusicSouth @sooriaruna @proyuvraaj pic.twitter.com/QlJnhaV4wv
— Seven Screen Studio (@7screenstudio) December 8, 2021