Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கல்லூரி மாணவன் சாவில்…. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்….!!

கல்லூரி மாணவர் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நீர்க்கோழினேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையனர் தாக்கியதில் மணிகண்டனின் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மாணவரின் சாவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர் மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் படித்த கல்லூரியான கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கல்லூரி மாணவன் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மணிகண்டன் குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனைதொடர்ந்து மாணவனை தாக்கிய காவல்துறையினர் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |