நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத 4.20 லட்சம் பேர் பேருந்து நிலையம், திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அனைத்து நிர்வாகத்தினரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்களை தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வர அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு, தேன்கனிக்கோட்டையிலுள்ள இந்தியன் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அனைவரும், நேற்று தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழுடன் குவிந்து விட்டனர். அனைவரையும் சோதித்து பின்னர் தான் வங்கிக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.