பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களை எடுத்துச் சென்ற அமரர் ஊர்தி கோவை மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் 13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் பொழுது முதலில் அமரர் ஊர்திக்கு பின் வந்த பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து தற்போது பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல்கள் எடுத்துச்சென்ற அமரர் ஊர்தி கோவை மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. இதனால் அவரின் உடல் உடனடியாக மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றது.