பிரிட்டன் மகாராணியார் ஓய்வெடுக்கக்கூடிய தனிப்பட்ட இடத்தில் பயங்கர பாலியல் குற்றவாளிகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மகாராணியின் பால்மோரல் அரண்மனையில், அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பிரபல பாலியல் குற்றவாளியும், அவரின் நெருங்கிய தோழியான பிரிட்டனை சேர்ந்த Ghislaine Maxwell-யும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
எப்ஸ்டீன் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர். இவர் சிறுமிகள் உட்பட பல பெண்களை, ஏமாற்றி, பாலியல் தொழிலாளிகளாக்கி, பணக்காரர்களிடம் அனுப்பியிருக்கிறார். மேலும், பெண்களை ஏமாற்ற எப்ஸ்டீன்-க்கு அவரின் தோழி Ghislaine தான் உதவியிருக்கிறார்.
அந்த சமயத்தில், Virginia Giuffre என்ற இளம்பெண், எப்ஸ்டீனும், Ghislaine-ம் சேர்ந்து, என்னையும் பல பெண்களையும் ஏமாற்றி பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூஸ், உட்பட பலருக்கு விருந்தாக்கினர் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பின்பு, எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தார். எனவே, அவரின் தோழியான Ghislaine மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்நிலையில், எப்ஸ்டீனும், Ghislaine-யும், பிரிட்டன் மகாராணிக்குரிய பால்மோரல் அரண்மனையில், மகாராணியார், தன் கணவருடன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து எடுத்த புகைப்படம் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.
எப்ஸ்டீனும், மகாராணியாரின் மகன், இளவரசர் ஆண்ட்ரூவும் நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில், ஆண்ட்ரூஸ், அவர்களை இருவரையும் பால்மோரல் அரண்மனைக்கு அழைத்துச் சென்றிருப்பார் என்று கூறப்படுகிறது.