கற்பழிப்புசம்பவங்களை இரு மாதங்களுக்குள் போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
கற்பழிப்பு சம்பவங்களில் இரு மாதங்களுக்குள் போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவும் வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார் . மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பீகார் தலைநகரான பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.நாடு முழுவதும் பெண்களுக்கு எதிடாக நடைபெற்றுவரும் கற்பழிப்பு சம்பவங்கள் மிகுந்த கண்டனத்துக்குரியது என ரவிசங்கர் பிரசாத் வேதனை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து
கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வரும் வழக்குகளில் போலீசாரின் விசாரணை 2 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கும் நான் கடிதம் எழுதவுள்ளேன்.நீதிமன்றத்துக்கு வரும் இத்தகைய வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்.
மேலும், கற்பழிப்பு மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.