Categories
தேசிய செய்திகள்

கருப்பு பெட்டி என்பது என்ன…? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய…. முக்கியமான தகவல்கள் இதோ…!!!!

ஒரு விமானத்திற்கு விபத்து ஏற்பட்டாலோ, ஹெலிகாப்டர் விபத்தோ ஏற்பட்டால் உடனே பரபரப்பாக பேசப்படுவது அதன் கருப்பு பெட்டி எங்கே? என்பதுதான். ஏனெனில் விபத்து நடந்ததற்கான காரணம், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என அனைத்தையுமே இந்த கருப்பு பெட்டி பதிவு செய்துவிடும். கருப்பு பெட்டியை முதன்முதலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார் .இதைக் கண்டுபிடிக்க முக்கிய காரணம் என்னவென்றால் வாரன் தந்தை விமான விபத்தில் இறந்து போன போது விபத்திற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழம்பி போனதால் இதை கண்டுபிடிக்கும் முயற்சியில் டேவிட் வாரன் இறங்கினார்.

அதன் பலனாக ஒரு சிறிய கருவியை கண்டுபிடித்தார் டேவிட் வாரன். அவர் கண்டுபிடித்த கருவியை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய அரசு அதை போயிங் 747 விமானத்தில் பயன்படுத்தியது. டைட்டானியம் என்ற உலோகத்தாலான இந்த கறுப்பு பெட்டி ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. 20 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் எதுவும் ஆகாது. கடலில் விழுந்து விபத்துக்குள்ளான 30 நாட்கள் வரை கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்கைகளை தெரிவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னனு பதிவு சாதனங்களில் ஒரு தொகுப்பு தான் இந்த கருப்பு பெட்டி.

இதில் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர், காக்பிட் குரல் ரெக்கார்டர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த டிஜிட்டல் தரவு ரெக்கார்டு கருவி விமானத்தின் உயரம், செங்குத்து ஓட்டம், வானியல் குறித்து அனைத்து தரவுகளையும் பதிவு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. காக்பிட் குரல் ரெக்கார்டர் விமானிகளின் உரை, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான உரை,  விமானத்தின் சுவிட்ச் மற்றும் விமான இன்ஜின், ஒலி என அனைத்துமே பதிவு செய்யும்.

கருப்புப் பெட்டியில் இருக்கும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர் 25 மணிநேர விமானத் தரவுகளுக்கு போதுமான சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், CVR களில் 2 மணிநேர காக்பிட் உரையாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். இந்த இரண்டு மணி நேரம் CVR காக்பிட் மூலம் விபத்து நடந்ததற்கான காரணம், விமானிகளுக்கு இடையான உரையாடல்களின் பதிவு, விபத்து நிகழப்போவதை விமானிகள் அறிந்திருந்தார்களா? விமானத்தை கட்டுப்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என்பதனை புலனாய்வு குழுவினர் விபத்திற்கான காரணத்தை அறிவார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விபத்து நடந்த விமானத்திற்குள் கருப்பு பெட்டி இருந்தால் மட்டுமே விமானத்தை கண்டுபிடிக்க முடியும்.

தனியாக எங்காவது விழுந்து விட்டால், அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியாது. வெறும் கருப்பு பெட்டி மட்டுமே கிடைக்கும். விமானத்தின் கருப்பு பெட்டி என்றால் அது கருப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நினைத்ததுண்டு. ஆனால் கருப்புப் பெட்டி என்பது உண்மையாகவே ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விபத்து நடைபெற்ற இடத்தில் அதை எளிதாக கண்டுபிடிப்பதற்கான இந்த நிறம் பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |