Categories
பல்சுவை மாநில செய்திகள்

நான் உன் அம்மா இல்ல….. ”உன் சங்கை அறுத்துடுவேன்”…. கொடூர தாயின் வைரல் வீடியோ …!!

பெண் குழந்தையை கடுமையாக மிரட்டும் தாயின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  வருகின்றது.

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் உலக நாடுகளின் எங்கோ , எதோ ஒரு பகுதியில் நடைபெறும் சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியாகவும் , சோகமாகவும் , ஆச்சரியமாகவும் இருப்பது வாடிக்கையாக இருந்து வருகின்றது.இது தமிழகத்திலும் விதிவிலக்கல்ல. சாப்பாடுதான் முக்கியம் என்று சொன்ன சிறிய ஆண் குழந்தை வீடியோ_வை இந்த உலகமே கண்டு மகிழ்ந்தது. அதே போன்று தற்போதும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதில் கொடூர குணம் கொண்ட ஒரு தாய் பெண் குழந்தையை உன் சங்கை அறுத்து விடுவேன் என்று கையில் ஒரு பெரிய இரும்பு போன்று குத்து ஆயுதத்தை வைத்துக் கொண்டு மிரட்டுகின்றார். அப்போது , உனக்கும் இவனுக்கும்  எந்த சம்மந்தமும் இல்ல தெரியுதா ? இவன் மட்டும் தான் என் வயித்துல பிறந்தான் நீ பிறக்க வில்லை. நீ என் மகள் கிடையாது. உன் அப்பா பாக்க சொல்ல போய் தான் நான் பாக்குறேன். உன்னை என் மகளாக ஏற்றுக் கொள்ள வில்லை. என்ன பொறுத்தவரை நீ ஒரு செத்த பிணம். ஒரு பிணத்தை போல தான் உன்னை பாக்குறேன். நீ என் வயத்துல பிறந்தியா ? இல்ல தான …. அப்படியே வச்சுக்கோ.

அம்மா , நொம்மா , தம்பின்னு வந்த உன் சங்கை அறுத்து உன் கைல கொடுத்துருவேன் போயிட்டே இருப்பேன்… வாய்மூடு , வெளிய போய் படு என்று அந்த பெண் குழந்தையின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகின்றது.  இந்த வீடியோ_வை பார்த்த பலரும் அந்த கொடூர பெண்ணை தண்டிக்க வேண்டும் கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ : 

https://youtu.be/H3U4YXlJr6g

 

Categories

Tech |