இந்திய தபால் துறை வழங்கும் பிரான்சைஸ் திட்டம் 5,000 ரூபாய் முதலீட்டில் லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்று தரக்கூடிய ஒரு சிறந்த சேவையை அளிக்கிறது.
இந்திய தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன்படி வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களை விடவும் தபால்துறை சேமிப்பு கூடுதல் வட்டி உள்ளிட்ட சில சலுகைகளை கொடுக்கிறது. இந்த வரிசையில் தற்போது 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சிறந்த வாய்ப்பை தபால்துறை கொடுத்து வருகிறது. அதாவது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு 2 விதமான பிரான்சைஸ் திட்டத்தை வழங்குகிறது. அந்த அடிப்படையில் தபால் நிலைய பிரான்சைஸ் மற்றும் தபால் நிலைய முகவர்கள் பிரான்சைஸ் என்ற 2 சேவைகளில் வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
இவர்களில் தபால் நிலைய முகவர்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் போஸ்டல் ஸ்டாம்புகள், எழுதுப்பொருட்களை வழங்குபவர்கள் ஆவர். தற்போது இந்த போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸை தொடங்க தகுதி உடையவர்கள் யார் என்ற விவரங்களை அறிந்து கொள்வோம். இந்தப் போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸை தொடங்கும் நபர் முதலில் 8 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற தகுதிகள் இருந்தால் பிரான்சைஸ் தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதன் மூலமாக ஒருவர் பெற்றுக்கொள்ளும் சம்பாத்திய விபரங்களை பொறுத்தளவு,
ரெஜிஸ்டர் போஸ்ட்- 3 ரூபாய்
ஸ்பீட் போஸ்ட்- 5 ரூபாய்
100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையுள்ள மணி ஆர்டர்- 3.50 ரூபாய்
200 ரூபாய்க்கு மேற்பட்ட மணி ஆர்டர்- 5 ரூபாய்
1,000 ரூபாய்க்கு மேற்பட்ட புக்கிங் மற்றும் ஸ்பீட் போஸ்டு- மாதம் 20 % கூடுதல் கமிஷன்
தபால்தலை, அஞ்சல் எழுதுபொருட்கள், பணம் ஆர்டர் படிவம் விற்பனை தொகையில் 5% தொகை கமிஷன்
வருவாய் முத்திரைகள், மத்திய ஆட்சேர்ப்புக் கட்டண முத்திரைகளின் விற்பனை உள்ளிட்ட சேவைகளில் அஞ்சல் துறையின் வருமானத்தில் 40 % தொகை கமிஷனாக கிடைக்கும்.
விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள்
1. முதலில் பிரான்சைஸ் அவுட்லெட்டின் செயல்பாடுகளை விளக்கும் வணிகத் திட்டத்துடன் படிவத்தை கொடுக்க வேண்டும்.
2. இந்த படிவம் தபால் நிலையத்தில் இருந்து நேரடியாக கிடைக்கும் அல்லது இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3. மேலும் இப்படிவத்தை கொடுத்தவுடன் தபால் துறையின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
4.அதன்பின் விண்ணப்ப பதிவு முடிந்த 14 தினங்களுக்கு பிறகு உங்கள் பிரான்சைஸை தபால் கோட்ட தலைவர் உறுதி செய்வார்.