Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”….!!

மேஷ ராசி அன்பர்களே….!!   இன்று நீங்கள் ஆரவாரம் தவிர்ப்பதால் அன்றாட பணி சரியாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு மாற்று உபாயம் உதவும். பண வரவை விட செலவு இன்றைக்கு கூடும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட கூடும். இன்று முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பணவரவு இருக்கும் . அதுமட்டுமில்லாமல் கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மையான நாளாக இருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தை முன்னேற்றகரமாக நடத்துவதற்கான சிந்தனை மேலோங்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் பிரகாசமான வாய்ப்பு இருக்கின்றது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகமாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவுகள் வரக்கூடும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

இன்று மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சியில் வெற்றியை கொடுக்கும். வீன் கவலையை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் ஒற்றுமை வலப்படும். சுகபோக வாழ்வு ஏற்படும். இன்று நிம்மதியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள்.  அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினர் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

 

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று பணவரவு தாராளமாகவே இருக்கும், இருந்தாலும் செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும். என்று குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று பிள்ளைகளை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள், அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருட்கள் ஏதும் வாங்க வேண்டாம். தியானம் தெய்வ வழிபாடு மனம் நிம்மதி பெறுவதற்கு உதவும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய நாள் துணிச்சல் கொஞ்சம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். கூடுமானவரை பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும்.

கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் பொறுப்பான செயலை மற்றவர்கள் விமர்சிக்கக் கூடும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவருடன் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் இருக்கும். பெண்கள் பண பொறுப்பை மட்டும் ஏற்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனையை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.

அதுமட்டுமில்லாமல் அயல்நாட்டிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் நீங்கள் இன்று ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் மற்றவருடைய பணத்திற்கு இன்று நீங்கள் பொறுப்பு ஏற்க கூடிய சூழல் இருக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். கூடுமானவரை இன்று பொறுமையாகவும் நிதானமாகவும் காரியங்களைச் செய்யுங்கள்.

இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்வியில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.  இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது  நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுஙகள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண்-: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! மனதில் சில மாற்றங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள். இடையூறாக செயல்பட்டவர் விலகி போவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும் பணியாளர்கள் பரிசு பாராட்டுகளை பெறக்கூடும். இன்று எதிலும் அதிக சிரமம் எடுத்து வேலை செய்யக் கூடிய சூழல் இருக்கும். மன அமைதி இருக்கும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவீர்கள். இன்று ஓரளவு அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் முக்கிய பணியையும் மேற்கொள்வார்கள்.

சக மாணவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி பொங்கும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பு அவசியமாக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். சுற்றுச் சூழ்நிலை தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் கெடலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு நித்திரைக்குச் செல்வது மிகவும் சிறப்பு. இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல் துறையினர் புதிய முடிவுகள் எடுக்கும் பொழுது கவனமாக எடுங்கள். குடும்பத்தில் இன்று ஒற்றுமை இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நடக்க கூடிய சூழல் இருக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று மாணவ கண்மணிகள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை பெறக்கூடும். வெற்றி வாய்ப்புக்கள் வந்து குவியும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்து காரியமும்  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். முன்னர் செய்த நல்ல செயலுக்கு உரிய நல்ல பலன் இன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். இன்று வீடு மனை புதிய சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சம் கவனமாக வாங்குங்கள். கூடுமானவரை நன்கு விசாரித்து செயல்படுவது மிகவும் நல்லது. இன்று குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மற்றவரிடம் மட்டும் ஒரு சில நேரங்களில் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை மட்டும் ஒரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இடையூறு செய்பவரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாக்கி மனதை கஷ்டப்படுத்தும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றுவது நல்லது. இன்று உங்களுடைய தன்னம்பிக்கை வளரும் நாளாக இருக்கும். அதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும் பணவரவு ஓரளவு தான் இருக்கும்.

நீங்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது நிதானமாக இருங்கள். கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் எழக்கூடும். ஆகையால் நீங்கள் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்விக்காக கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

கடுமையாக உழையுங்கள், நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள். அதுமட்டுமில்லாமல் சக மாணவரிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய  அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்கள் அதிக அன்பு பாசத்துடன் உங்களை நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்திற்காக புதிய முயற்சிகளை நீங்கள் செய்யக் கூடும். அந்த முயற்சி சாதகமான பலனை உங்களுக்கு கொடுக்கும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை மட்டும் இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம்.

உங்களுக்கு அனைத்து விதத்திலும் நல்லதே நடக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் செல்லக் கூடும். அந்த பயணங்கள் வெற்றிகரமாகவே நடக்கும். இன்று பணவரவு பையை வந்து நிரப்பும். அதுமட்டுமில்லாமல் சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான சூழல் அமையும்.

கல்வியில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் ஆசிரியரின் ஒத்துழைப்பும் இன்று கிடைக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! உங்களின் தனித்திறமையை இன்று வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி ஒன்று இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் இருக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது மட்டும் கடினம். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதுகலம் பெறுவீர்கள். இன்று மனமகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு ஒற்றுமை இருக்கும்.

வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழல் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணம் கூட உங்கள் கையில் வந்து சேரும். இன்றையநாள் நீங்கள் மனமகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் மிகுந்து இருக்கும்.

நல்ல முன்னேற்றம் இருக்கும் இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள், சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! உங்கள் சிரமத்தை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். அது மட்டுமில்லாமல் ரகசியங்களை தயவு செய்து பகிர்ந்து கொள்ள வேண்டாம். இஷ்ட தெய்வத்தின் கருணையால் நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான வளர்ச்சி இருக்கும். பணச் செலவில் சிக்கனம் இருப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களுடைய புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையும் நீங்கள் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கூடுமானவரை எந்த ஒரு விஷயத்தையும் உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்வதுமிகவும்  நல்லது. தயவுசெய்து இன்று நீங்கள் கோபப்படாதீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது கொஞ்சம் கனிவாக பேசுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம்கூடும். உழைப்பு கொஞ்சம் கூடினாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. மேலதிகாரியிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். கோபத்தை தவிர்த்து விடுங்கள். அது போலவே இன்று உடலில் வசீகரத் தன்மை கூடுவதால் காதலில் வயப்பட்டகூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தினால் சிறப்பாக இருக்கும். திருமணம் கைகூடும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |