Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் வங்கியில் இருந்து பேசுகிறேன்… பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

வங்கி அதிகாரி என்று  கூறி வாலிபர் பணம்  மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி பகுதியில் கீர்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்  கீர்த்திகாவின் செல்போனிற்கு  மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு  தான் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரிவதாகவும் உங்களின்  கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் கூறுங்கள் என்று  கேட்டுள்ளார்.

இதனை நம்பிய  கீர்த்திகாவும் தனது  வங்கி விவரங்களைக் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரின்  செல்போனுக்கு   வங்கி கணக்கிலிருந்து 44 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்திகா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |