சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோதிடராக உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்திரசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சந்திரசேகரை கைது செய்ய வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் தலைமறைவானது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலைமறைவான சந்திரசேகரை வலைவீசி தேடி வருகின்றனர்.