Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்…. ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு மாதப்பூர் சுகாதார மையத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமாரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோவிந்தசாமி அசோக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் அசோக்குமார் இதுகுறித்து பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவிந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |