Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழுவத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் காதல் மனைவி…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்டமொழி பகுதியில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வராஜ் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் மற்றும் அவரது மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |